Saturday, 26 January 2013

வயித்து வலி........

வயித்து வலி......

வயித்துவலி பல வகைப்படும்....

அதிக பேதியாவதால் வரும் வயிற்றுவலி..
ஜீரணம் ஆகாமல் இருப்பதால் வரும் வயிற்றுவலி மற்றும்..
மாதவிடாய் பிரச்சனையால் பெண்களுக்கு வரும் வயிற்றுவலி..

மருந்துகள்

எல்லாவிதமான வயிற்றுவலிக்கும் பொதுவாக

டைசைகிளோமின்,

பொதுவாக இவை பாரசிட்டமால் அல்லது டைகுளோபினாக் என்ற மருந்துடன் சேர்த்து கொடுக்கப்படும்
மாதவிடாய் வயிற்றுவலிக்கு..
டைசைக்கிளோமின் + பாரசிட்டமால் மாத்திரையை சாப்பிடலாம்..இதனுடம் ராணிடிடின் சேர்த்துகொள்வது நல்லது..

பிரால், கொலிரிட், சைக்லோபாம்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை..யாருக்கு வயித்துவலி வந்தாலும் இதை கொடுக்கும் போது உடனியாக வயித்துவலி நின்று விடும்.

ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல..வலி குறைந்தவுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்....

Monday, 21 January 2013

ஜெனிரிக் & பிராண்ட்

ஜெனிரிக் பிராண்ட் இரண்டிற்க்கும் இடையே உள்ள வித்தியாசம்

பெரும்பாலான மக்களுக்கு மட்டுமல்ல...படித்தவற்களுக்கு கூட புரியாத புதிர்தான் ஜெனிரிக் மற்றும் பிராண்ட் மருந்திற்க்கும் உள்ள வித்தியாசம் ?
ஏன் ஒரே மருந்தின் விலை ..ஒவ்வொரு கம்பனிக்கும் வித்தியாசபடுகிறது..காரணம் என்ன ?

சிட்ரசின் *என்ற மருந்து சளி மற்றும் தும்பல்..இவை இரண்டிற்கும் பயன்படும் மருந்தாகும்
இதோட பிராண்ட் நேம்**..ஒவ்வொரு கம்பனியும் அவர்களுக்கு பிடித்த பெயரை வைத்து கொள்வார்கள்
ஒவ்வொரு முறையும் ஒரு பேசன்ட் * மருத்துவரிடம் போய் தும்பல்  மாத்திரை கேக்கும் போது .மருத்துவர் சிட்ரசின் எழுதினால்...பேசன்ட் என்ன நினைப்பார்..இந்த டாக்டர்-கு வேற மருந்தே தெரியல போல இருக்குனு வேற மருத்துவர் கிட்ட போய்டுவாங்க..அதனால் .மருத்துவர் என்ன பண்ணுவார் அந்த பேசண்ட் ஒவ்வொரு முறை வரும் போதும் ஒவ்வொரு பிராண்ட் எழுதுவார்...
ஜெனிரிக் மருந்தின் விலையை விட பிராண்ட் மருந்தின் விலை அதிகம் ஏன் ?

இதற்க்கு இரு காரணங்கள் உண்டு...

 ஒவ்வொரு மருந்தும் அதனோட ப்ராட்டாகால் படி..தயாரிக்கும் போது...அதன் எடை 95 -100 சதவிதம் இருக்க வேண்டும் .அதாவது பாரசிட்டமால் 500 மி.கி என்றால் அதனோட எடை 450- 550 இருந்தால்தான் மார்கெட் கு வர முடியும்...ப்ராண்டட் மருந்துகள் இன்னும் சரியாக 98-102 உள்ளாவே அந்த மருந்தின் விகிததை வைத்திருப்பார்கள் அதாவது 490-510 மி.கி உள் இருக்கும்..ஆனால் ஜெனிரிக் 450 மிகி வந்தா போதும் நினைப்பார்கள்...எனவே அவர்கள் ஒவ்வொரு மாத்திரையிலும் 50 மி.கி மிச்சம் பன்ணுவார்கள் ..அதனால்..விலை கொஞ்சம் குறைவாக கிடைக்கும்

எல்லோருக்கும் தெரிந்த காரணம் தான்..ப்ராண்டட் கம்பனி அவர்களின் மருந்தின் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ..அவர்களின் மருந்தை ப்ரமோட் பன்ணுவார்கள் தொலைக்காட்சி மற்றும் செய்திதாள் வழியாக...எ.கா சாரிடான், விக்ஸ் ஆக்சன் 500 கால்பால் க்ரோசின்....ரிவைட்டல்
இதற்காக அந்த கம்பனிகள் குறிப்பிட்ட தோகையை செலவலிக்க வேண்டி வரும் அந்த செலவை...மருந்தின் மீது வைத்து விடுவார்கள் ...ஜெனிரிக் மருந்தை விளம்பரபடுத்த மாட்டார்கள் அந்த பணம் அவர்களுக்கு மிச்சம்...அதனால்தான் பிராண்ட் மருந்து விலை அதிகம் ஜெனிரிக் மருந்து விலை குறைவு........

Wednesday, 16 January 2013

அலோபதி...... அடிப்படை.......

இந்த வலைத்தளம்... எனக்கு தெரிந்த ..நான் அறிந்த மருத்துவ சம்பந்தமான குறிப்புகளை உங்களுக்காக எழுதுகிறேன் ..நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக.

நடைமுறையில் சாதாரணமாக வரும் காய்ச்சல், தல வலி , உடம்பு வலி  போன்ற பிணிகளுக்காக சாப்பிடும்  சில மருந்துகளை பற்றி எல்லோரும் அறிந்து கொள்வது அவசியம்
மருந்து கடைகளுக்கு சென்று உடம்புவலிக்கு மாத்திரை கொடுங்க, காய்ச்சல் மாத்திரை கொடுங்க என கேட்கும் பல மனிதற்களை நான் பார்த்திருக்கிறேன் ..அதுவும் படித்தவர்கள்  கூட பிராண்ட் நேமை தவறாக உச்சரித்து ..தடுமாடுகிறார்கள்.. அந்த தயக்கத்தை போக்கவே இத்தலம்..
இனி வேண்டாம் தயக்கம்..

ஒவ்வொரு பிணிகளுக்கும்.எந்த மருந்து என தெரிந்து கொள்வோம்.  ..குறைந்தது ஜெனிரிக் நேமாவது அறிந்து கொள்வோம்..

ஜெனிரிக் நேம் என்றால் என்ன?
குறிப்பிட்ட  வியாதிக்கான மருந்தின் கெமிக்கல் பெயரே..ஜெனிரிக் நேம் ஆகும்..
எ.கா ..காய்ச்சல் வந்தால் எடுத்து கொள்ளும் மருந்தின் கெமிக்கல் பெயர் பாராசிட்டமால்
பிராண்ட் நேன் என்றால் என்ன ?
ஒவ்வொரு மருந்து கம்பனியும் அவர்கள் தயாரிக்கும் மருந்திற்க்கு அவர்களே. ஒரு பெயரை வைத்துக்கொள்வார்கள்
எ.கா காய்ச்சல் மருந்து பாராசிட்டமாலின் ப்ராண்ட் நேம் டோலோ-650 பரா-650